டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் நிகார் சுல்தானா

கேப்டன் பொறுப்பில் இருந்து விலக அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் நிகார் சுல்தானா
Published on

டாக்கா,

வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து நிகார் சுல்தானா விலக உள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்ததும், 20 ஓவர் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலக அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகார் சுல்தானா ஏற்கனவே தனது முடிவை வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் டி20 கேப்டன் பதவியை துறக்க அவர் முடிவு செய்துள்ளார்.

அதேவேளையில், ஒருநாள் போட்டிகளில் வங்காளதேச அணிக்கு தொடர்ந்து கேப்டனாக செயல்பட நிகார் சுல்தானா விருப்பம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் மூலம் தனது முடிவை அவர் முறைப்படி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com