அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிரான இரண்டு 20 ஓவர் போட்டியில் (வருகிற 26, 28-ந் தேதி) விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்று அந்த அணியுடன் 5 இருபது ஓவர் போட்டியில் (ஜூலை. 1, 4, 7, 9, 11-ந் தேதிகளில்) ஆடுகிறது.

இந்த போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்த ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு கடந்த 20-ந் தேதி சென்னையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து மீண்டு வர சில வாரம் பிடிக்கும் என்பதால் அவர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக மும்பையை சேர்ந்த ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே சேர்க்கப்பட்டுள்ளார். 23 வயதான சூர்யான்ஷ் ஷெட்கே சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய 'ஏ' அணிக்காக ஆடி 147 ரன்கள் எடுத்ததுடன் 2 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார். அவர் இந்திய அணிக்கு அழைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி புரூக் தலைமையிலான 17 பேர் கொண்ட அணியில் ஜோஸ் பட்லர். ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட், வில் காக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன், அடில் ரஷித் உள் ளிட்ட முன்னணி வீரர்கள் தொடருகிறார்கள். புதுமுக வீரராக ஆல்-ரவுண் டர் ஜேம்ஸ் கோல்ஸ் இடம் பிடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com