

புதுடெல்லி,
ஜூலை- ஆகஸ்டு மாதம் ஸ்காட்லாந்தில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டில் கிரிக்கெட், ஆக்கி ஆகிய போட்டிகள் இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2030-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெறும் காமன் வெல்த் விளையாட்டில் இவ்விரு போட்டிகளும் மீண்டும் இடம் பெறு கிறது. அத்துடன் கபடி, மல்லர்கம்பம், கோ-கோ, யோகா ஆகியவற்றில் இரண்டு போட்டி சேர்க்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று தெரிவித்தார்.