இனிமேல் ஆர்யன் அல்ல... அனயா... பெண்ணாக மாறிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன்

சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதை அறிவித்து இருக்கிறார்.
Instagram; anayabangar
Instagram; anayabangar
Published on

மும்பை,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், தான் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதை அறிவித்து இருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், அது சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் என்பது யாருக்கும் தெரியவில்லை. தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் அவர் ஆணாக இருந்தபோது இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அதன் மூலம் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார் என்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. மேலும், ஆர்யன் என்ற தனது பெயரை அனயா என மாற்றிக் கொண்டு இருக்கிறார். அவர் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு விளையாடி வந்தார். ஆனால், அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனிடையே, தான் பெண்ணாக உணர்ந்ததை அடுத்து அவர் ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொண்டு தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் அவரது முடிவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com