இது போன்ற போட்டிகள் இனி வேண்டாம் - பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பேட்டி

இது போன்ற வெற்றியை நான் எப்போதுமே பெற்றது கிடையாது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @KKRiders
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @KKRiders
Published on

முல்லன்பூர்,

ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார்.

கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி, பஞ்சாப் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.1 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 16 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் திரில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சாஹலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டம் முடிந்த பின்னர் பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

என்னுடைய இதயத்துடிப்பு இப்பொழுதும் அதிகமாக இருக்கிறது. தற்போது எனக்கு 50 வயது ஆகிறது. எனவே, இது போன்ற போட்டிகள் இனி வேண்டாம் என்று நினைக்கிறேன். 112 ரன்களை வைத்து போட்டியை வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி. அதிலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் பெற்றது மிகச் சிறப்பான வெற்றி என்று நினைக்கிறேன்.

நான் ஐ.பி.எல் தொடரில் பயிற்சியாளராக பல்வேறு போட்டிகளில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், இது போன்ற ஒரு வெற்றியை நான் எப்போதுமே பெற்றது கிடையாது. அந்த அளவிற்கு இந்த போட்டி ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com