ரோகித்தின் பார்ம் பற்றி கவலைப்படத் தேவையில்லை - ஹர்திக் பாண்ட்யா

சென்னைக்கு எதிரான போட்டியின் ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
Image Courtesy: @IPL / @ChennaiIPL / @mipaltan
Image Courtesy: @IPL / @ChennaiIPL / @mipaltan
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் மும்பை கேப்டன் பாண்ட்யா கூறியதாவது, நாங்கள் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது, இது அதிக ஸ்கோரிங் கொண்ட ஆட்டமாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் இன்று விளையாடும் விதத்தை பார்க்கும் போது மிகவும் நிம்மதியாக இருந்தது.

ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து கவலை கொள்ள அவசியமே இல்லை. ஏனென்றால், இவர் இப்படி ஒரு இன்னிங்சை கண்டிப்பாக விளையாடுவார் என்று எங்களுக்கு தெரியும். ரோகித் சர்மா அதிரடியை காட்டினால் எதிரணி நிச்சயம் தோல்வி காணும் என்பது எங்களுக்கு தெரியும். ரோகித் சர்மாவுக்கு தகுந்த மாதிரி சூர்யகுமாரும் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

ரோகித் - சூர்யகுமார் அமைத்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தையே எங்கள் பக்கம் கொண்டு வந்தது. நாங்கள் அடிப்படையை பின்பற்றுகிறோம். நாங்கள் எளிமையான கிரிக்கெட்டை விளையாடுகிறோம். போட்டியை பார்க்கும் போது, வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுத்தனர்.

ஆனால், இன்னிங்ஸ் முடிவில் அது சராசரியான ஸ்கோர் தான். ஒரு நல்ல போட்டியை விளையாடுவது வெகு தூரத்தில் இல்லை. எனினும் இன்றைய ஆட்டத்திலும் சில தவறுகளை செய்தோம். அதனை நாங்கள் சரி செய்ய முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com