விராட் கோலிக்கு இடமில்லை... தான் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த கனவு அணியை வெளியிட்ட மோர்கன்

மோர்கன் தேர்வு செய்த அணியில் விராட் கோலியை கழற்றி விட்டிருப்பது ஆச்சரியமாக அமைந்துள்ளது.
விராட் கோலிக்கு இடமில்லை... தான் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த கனவு அணியை வெளியிட்ட மோர்கன்
Published on

லண்டன்,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இயன் மோர்கன் தான் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த லெவன் அணியை வெளியிட்டுள்ளார்.

மோர்கன் தேர்வு செய்த அணியில் 11 வீரர்களும் பல்வேறு நாட்டின் அணிகளில் சிறந்து விளங்கிய ஓய்வு பெற்ற வீரர்களாக உள்ளனர். தற்சமயத்தில் விளையாடும் ஒரு வீரரை கூட அவர் தேர்வு செய்யவில்லை. குறிப்பாக நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரராக கருதப்படும் விராட் கோலியை அவர் தேர்வு செய்யாதது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோர்கன் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த கனவு அணி விவரம் பின்வருமாறு:-

அலஸ்டயர் குக் (கேப்டன்), காலிஸ், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, ஏபி டி வில்லியர்ஸ், குமார் சங்கக்கரா, தோனி (விக்கெட் கீப்பர்), அனில் கும்ப்ளே, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டெயின் மற்றும் மிட்செல் ஜான்சன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com