

ஹாமில்டன்,
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனினும், 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தோல்விக்கு பின் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது;
”மிடில் ஓவர்களில் எங்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. நானும் இஷானும் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தோம். நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். அதன்பிறகு, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். பின்னர் திடீரென புதிய பேட்ஸ்மேன் மீது அழுத்தம் ஏற்பட்டது. இது விக்கெட் விளையாடுவதற்கு எளிதாக இல்லை.
194 ரன்கள் சிறந்த ஸ்கோர் என்று நினைக்கிறேன். நாங்கள் பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். இது ஒரு சிறந்த பாடம். ஒரு சிறந்த கற்றல் அனுபவம். நியூசிலாந்து மைதானங்களில் இந்திய ரசிகள்கள் திரண்டு வந்து ஆதரவு அளித்த விதம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது.”
இவ்வாறு அவர் கூறினார்.