சஞ்சு சாம்சன் இல்லை...’தொடர் நாயகன் விருதுக்கு மிகவும் தகுதியானவர் அவர்தான்’ - ஏபி டி வில்லியர்ஸ்

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார்.
சஞ்சு சாம்சன் இல்லை...’தொடர் நாயகன் விருதுக்கு மிகவும் தகுதியானவர் அவர்தான்’ - ஏபி டி வில்லியர்ஸ்
Published on

ஆமதாபாத்,

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், தொடர் நாயகன் விருதுக்கு ஜஸ்பிரித் பும்ரா மிகவும் தகுதியானவர் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாகவும் தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற அணியாகவும் இந்தியா சாதனை படைத்தது.

Also Read
பாபர் அசாம் மீதான பாலியல் புகார் சர்ச்சை… லாகூர் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
சஞ்சு சாம்சன் இல்லை...’தொடர் நாயகன் விருதுக்கு மிகவும் தகுதியானவர் அவர்தான்’ - ஏபி டி வில்லியர்ஸ்

இதில் சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார். இருப்பினும், முக்கியமான கட்டங்களில் பும்ரா வீசிய ஓவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதால், அவரே இந்த விருதுக்கு அதிக தகுதியுடையவர் என டி வில்லியர்ஸ் கூறினார்.

இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகளை (4/15) வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதற்கிடையில் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு தற்போது கவனம் ஐபிஎல் தொடரை நோக்கி திரும்பியுள்ளது. அந்த தொடரில் மும்பைக்காக பும்ராவும் சென்னைக்காக சஞ்சு சாம்சனும் விளையாட உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com