விராட் கோலி அல்ல...ஆஸ்திரேலியாவுக்காக விளையாட நான் தேர்வு செய்யும் இந்திய வீரர் இவர் தான் - மேத்யூ ஹைடன்

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி தற்போது ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 2 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனிடம் தற்போதுள்ள இந்திய அணியில் இருந்து ஒரு வீரரை ஆஸ்திரேலியாவுக்காக தேர்வு செய்து வரும் உலகக்கோப்பையில் விளையாட வைக்கலாம் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மேத்யூ ஹைடன் கூறியதாவது,

தற்போதுள்ள இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ராவை தேர்வு செய்து ஆஸ்திரேலியாவுக்காக உலகக்கோப்பை தொடரில் ஆட வைக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com