

கிறைஸ்ட்சர்ச்,
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை (அக்டோபர் 22) தொடங்குகிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் முதல் போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளின் அதிரடி தொடக்க வீரர்களான இந்தியாவின் அபிஷேக் சர்மா, நியூசிலாந்தின் பின் ஆலன் ஆகியோரின் ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான பின் ஆலன், அதிரடியாக ரன்களைக் குவிக்கும் திறன் கொண்டவர். சர்வதேச டி20 போட்டிகளில் 62 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 1,663 ரன்களைக் குவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 33 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தவர் பின் ஆலன். இந்த ஆண்டிலும் சிறப்பாக விளையாடி வரும் அவர், 10 டி20 போட்டிகளில் 378 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவும் அதிரடி ஆட்டத்தில் பின் ஆலனுக்கு இணையான சவாலை அளிக்கக்கூடியவர். சர்வதேச டி20 போட்டிகளில் 67 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 2,071 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் 34 டி20 போட்டிகளில் விளையாடி 956 ரன்களைக் குவித்துள்ளார்.
அதிரடியாகத் தொடக்கம் கொடுப்பதில் இருவரும் சிறந்து விளங்குவதால், இந்தத் தொடரில் இவர்களது ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, முதல் போட்டியிலேயே இருவரும் எவ்வாறு விளையாடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி அக்டோபர் 22-ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி அக்டோபர் 24-ம் தேதி அதே நகரில் நடைபெற உள்ளது.
மூன்றாவது போட்டி அக்டோபர் 27-ம் தேதி வெலிங்டனிலும், நான்காவது போட்டி அக்டோபர் 30-ம் தேதி ஆக்லாந்திலும் நடைபெறுகின்றன. தொடரின் கடைசிப் போட்டி நவம்பர் 1-ம் தேதி ஹாமில்டனில் நடைபெற உள்ளது.