டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய டிரெண்ட் போல்ட்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்தின் 4-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை போல்ட் பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய டிரெண்ட் போல்ட்!
Published on

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்காளதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் இரண்டாம் டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்சில் விளையாடிய வங்காளதேச அணி 126 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் நியூசிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இதனுடன் சேர்த்து 9 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார்.

மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். 300 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய நியூசிலாந்தின் 4-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை போல்ட் பெற்றார். இந்த மைல்கல்லை அவர் தனது 75வது டெஸ்டில் எட்டினார். இதற்கு முன் நியூசிலாந்து அணியில் சர் ரிச்சர்ட் ஹாட்லீ, டேனியல் வெட்டோரி மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com