நியூசிலாந்தில் சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்... ஸ்ரீநாத், ஷமி வரிசையில் இணைந்து அசத்தல்

ஜவகல் ஸ்ரீநாத் முதலிடத்தில் உள்ளார்.
 அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh)
Published on: 

ஆக்லாந்து,

நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) பெற்றுள்ளார்.

பந்துவீச்சு

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

185 ரன்கள்

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் டிம் சீபெர்ட் 38 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 30 ரன்களும், பிளேர் டிக்னர் 34 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால் நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஸ்ரீநாத், ஷமி வரிசையில்

இப்போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஜவகல் ஸ்ரீநாத் முதலிடத்தில் உள்ளார். அவர் 2003-ம் ஆண்டு ஆக்லாந்திலும், 1995-ம் ஆண்டு நேப்பியரிலும் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

முகமது ஷமி 2014-ம் ஆண்டு நேப்பியரில் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். தற்போது அர்ஷ்தீப் சிங்  70 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம்  மூலம் 3-வது பந்துவீச்சாளராக இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

ஒரு விக்கெட்

நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமை அனில் கும்ப்ளேவிடம் உள்ளது. அவர் 1994-ம் ஆண்டு வெலிங்டனில் 33 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் மேலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தால், நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்.

X