நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம், வதோதராவில் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜன. 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. டி20 போட்டிகளை பொறுத்தவரை ஜன.21, 23,25, 28,31 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம், வதோதராவில் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. விற்பனை தொடங்கிய 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.
ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






