ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்க வீரர் சாதனை

அறிமுக வீரராக களம் கண்ட தொடக்க ஆட்டக்காரர் ஜோர்டான் ஹெர்மேன் 150 ரன்கள் விளாசினார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்க வீரர் சாதனை
Published on

வின்டோக்,

நமிபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டி கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வின்டோக்கில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. அறிமுக வீரராக களம் கண்ட தொடக்க ஆட்டக்காரர் ஜோர்டான் ஹெர்மேன் 150 ரன்கள் (126 பந்து, 17 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்த அறிமுக வீரரான தென்ஆப்பிரிக்கா வின் மேத்யூ பிரீட்ஸ்கேவின் (2025-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 150 ரன்கள்) சாதனையை சமன் செய்தார்.

அடுத்து நமிபியா ஆடிய போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 31 ஓவர்களில் 262 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. நமிபியா அணி யால் 8 விக்கெட்டுக்கு 162 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 99 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com