ஒருநாள் போட்டி தரவரிசை: ஒரு புள்ளியில் முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த கில்

விராட் கோலி , ரோகித் சர்மா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஒருநாள் போட்டி தரவரிசை: ஒரு புள்ளியில் முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த கில்
Published on

புதுடெல்லி,

50 ஓவர் கிரிக்கெட்டுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 802 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். சுப்மன் கில் (2-வது இடம்), விராட் கோலி (3-வது இடம்), ரோகித் சர்மா (4-வது இடம்) ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுப்மன் கில் மொத்தமாக 188 ரன்கள் குவித்து, 802 புள்ளிகளுடன், ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளார்.

விராட் கோலியும், ரோகித் சர்மாவும், இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் முன்னேறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com