

மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 801 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில், தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் இந்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
முன்னதாக நியூசிலாந்தின் டேரில் மிட்செல் முதலிடத்தில் இருந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளி கில் நம்பர் 1 இடத்தை கைப்பற்றினார்.
மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளார். 4வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.