இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேரளா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள திருவனந்தபுரத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்:  கேரளா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. அதன் முதல் கட்ட வீரர்கள் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹப் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி செப்டம்பர் 30-ம் தேதி கவுகாத்தியிலும், 3-வது போட்டி அக்டோபர் 3-ம் தேதி நியூ சண்டிகரிலும் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் டி20 போட்டி அக்டோபர் 6-ம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது. அடுத்தடுத்த போட்டிகள் ராஞ்சி, இந்தூர், ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள திருவனந்தபுரத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை தந்துள்ளனர். இந்திய வீரர்களும் இன்று மற்றும் நாளை திருவனந்தபுரம் வந்து சேர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com