

ஆக்லாந்து,
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது;
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் விளையாடவுள்ளோம். மிகவும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் விளையாடுகிறோம் என்பதைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள். ஆகிப் நபி மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர். குர்னூர் 9-10 போட்டிகளில் விளையாடியுள்ளார். அர்ஷ்தீப் சிங் 18 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் தொடரில் நாங்கள்
பேட்டிங்கில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் உள்ளார்கள். ஆனால், பந்துவீச்சில் அப்படியில்லை. அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு ஆடுகளங்களில் பலரும் புதிதாக விளையாடுகிறார்கள். அதனால், ஒருநாள் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டால் அதற்கான பாராட்டுகள் பந்துவீச்சாளர்களையேச் சேரும்.”
இவ்வாறு அவர் கூறினார்.