நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வருகிற 11-ந்தேதி நடக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் வதோதரா (ஜன.11), ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது. ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு கமிட்டி இன்று தேர்வு செய்து அறிவிக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காணொலி மூலம் பங்கேற்க உள்ளார்.

கழுத்து வலி பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள கேப்டன் சுப்மன் கில் அணிக்கு திரும்புகிறார். ஆனால் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் இடம் தான் கேள்விக்குறியாகி உள்ளது. அவர் ஓராண்டுக்கு மேலாக ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு தேர்வாகி இருந்த போதிலும் ஒரு ஆட்டத்திலும் களம் இறக்கப்படவில்லை. ஏனெனில் விக்கெட் கீப்பிங் பணியை லோகேஷ் ராகுல் கவனிக்கிறார். அத்துடன் விஜய் ஹசாரே போட்டியிலும் ரிஷப் பண்டின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. அதனால் அவரை கழற்றி விட்டு, 2-வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு இஷான் கிஷன் அல்லது துருவ் ஜூரெலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

20 ஓவர் போட்டிக்கு முழுமையாக கவனம் செலுத்தும் வகையில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசும் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பெயர் பரிசீலிக்கப்படலாம். மற்றபடி ரோகித் சர்மா, விராட் கோலி அணியில் இடம் பெறுவார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com