ஒருநாள் கிரிக்கெட்: ரிக்கி பாண்டிங்கின் சாதனையை தகர்த்த விராட் கோலி


ஒருநாள் கிரிக்கெட்: ரிக்கி பாண்டிங்கின் சாதனையை தகர்த்த விராட் கோலி
x

தனி ஆளாகப் போராடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.

இந்தூர்,

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர். அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிகாக தனி ஆளாகப் போராடிய விராட் கோலி, சதமடித்து அசத்தினார். ஆனாலும் அவரது சதம் வீணானது. இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் 3வது பேட்டராக களம் இறங்கி அதிக ரன்கள் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். கோலிக்கு அடுத்த இடங்களில் பாண்டிங் - 12662 (330 இன்னிங்ஸ்) சங்ககாரா 9747 (238 இன்னிங்ஸ்) காலிஸ் 7774 (200 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.

1 More update

Next Story