

லாகூர்,
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் சமனில் உள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மழையால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜோஷ் இங்கிலிஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.