

லண்டன்
இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக இருப்பவர் நாத் சிவர்-பிரன்ட். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி விளையாட உள்ளது.
இந்த தொடர், 10-ந்தேதி தொடங்கும். 2-வது ஒரு நாள் போட்டி மே 13-ந்தேதி நடைபெறும். 3-வது ஒரு நாள் போட்டி மே 16-ந்தேதி நடக்க உள்ளது. இந்த தொடர் முடிந்ததும், இந்த இரு அணிகளும் பங்கேற்க கூடிய 3 சர்வதேச டி20 போட்டி தொடர் மே 20-ந்தேதி தொடங்கும்.
இந்நிலையில், இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் பிரன்ட், நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருடைய இடது காலில் ஏற்பட்ட சிறிய காயத்தினால் போட்டி தொடரில் விளையாடவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.