

கெபேஹா,
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 18-ந்தேதி கெபேஹாவில் தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 425 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 99 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பின்னர் 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் (87 ரன்), ஸ்காட் போலன்ட் (2 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மழை யால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் மதிய உணவு இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. டிரா செய்யும் முனைப்புடன் ஹெட்டும், போலன்டும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். தனது 13-வது சதத்தை பூர்த்தி செய்த ஹெட் 121 ரன்களில் (190 பந்து, 15 பவுண்டரி) ரபடாவின் பந்தில் போல்டானார். இதன் பின்னர் போலன்ட் (40 ரன், 166 பந்து). அலெக்ஸ் கேரி (37 ரன், 69 பந்து) ஆகியோரது போராட்டம் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 107.1 ஓவர்களில் 295 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா இன் னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், முந்தைய தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ககிசோ ரபடா 4 விக்கெட்டும், வியான் முல்டர் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட் டியுள்ளது.
வெற்றி தொடர்பாக பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறியதாவது,
எல்லாமே நன்றாக இருக்கிறது. வானிலையும் இன்றைய ஆட்டத்தில் தனது பங்கைச் செலுத்த விரும்பியது போல இருந்தது. வானிலை எப்படி இருக்கும் என்பது உறுதியாகத் தெரியாததால், டிரெஸ்ஸிங் அறையில் நாங்கள் சற்று பரபரப்பாக இருந்தோம். ஆனால், போட்டி தொடங்கியதும் விளையாடுவதில் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தோம்.
எதிரணி எங்களுக்கு அந்த ஆறு விக்கெட்டுகளையும் எளிதாகக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்துவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இருப்பினும், போட்டிக்குப் பிறகு டிரெஸ்ஸிங் அறையில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நான் ஏற்கெனவே கூறியதுபோல, நிச்சயமாக எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.இந்தப் போட்டியின் பல்வேறு கட்டங்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்ததைப் பார்த்தோம். குறிப்பாக, புதிய பந்தை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. அத்தகைய சூழலில் சிறப்பாக விளையாடி, அணியை மிகவும் வலுவான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த நிலையில் கொண்டு சென்றதில் எனக்கு மிகுந்த பெருமை இருக்கிறது.
அதே நேரத்தில், இந்த இன்னிங்ஸ் மூலம் தொடரை வெல்வதற்கான வாய்ப்பையும் அணிக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். எனவே, இந்த 179 ரன்கள் எனக்குப் பல வகைகளில் முக்கியமானவை. இந்த இன்னிங்ஸிலிருந்து நிறைய தன்னம்பிக்கையைப் பெற்றுக்கொள்வேன். இருப்பினும், என் மனதின் ஒரு பெரிய பகுதி இன்னும் தற்போதைய போட்டிச் சூழலிலேயே இருக்கிறது. ஏனென்றால், நாங்கள் இன்னும் செய்ய வேண்டிய பணி உள்ளது. தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கிறது. அந்தப் போட்டியும் முடிந்த பிறகுதான், இந்தச் சாதனையின் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்கவும், இந்த இன்னிங்ஸின் முக்கியத்துவத்தை உணர்ந்து மகிழவும் எனக்கு நேரம் கிடைக்கும். என தெரிவித்தார்.