

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுடனான போட்டியில் இந்த இரு இந்திய வீரர்கள் தான் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என பாகிஸ்தான் வீரர் முகமது ஹபிஸ் குறிப்பிட்டுள்ளார்
இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அதில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது , இந்த இரு அணிகளும் சந்திக்கும் போது அந்த போட்டி அதிக அழுத்தம் நிறைந்ததாக இருக்கும் என்று கூறிய முகமது ஹபீஸ், விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் திறமையான வீரர்கள் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அந்த ஆட்டத்தின் போக்கையே அவர்களால் மாற்ற முடியும். அதற்காக நான் பிற வீரர்களை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், நான் மேற்குறிப்பிட்ட இரு வீரர்களும் சிறப்பாக விளையாட தவறினால் பிற வீரர்களால் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாது என்றார்.