

ஷார்ஜா,
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் முத்தரப்புத் தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி 41.2 ஓவர்களில் 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கும் தொடக்கத்தில் சில விக்கெட் இழப்புகள் ஏற்பட்டன. ரஹ்மானுல்லா குர்பாஸ் 6 ரன்களிலும், செதிகுல்லா அடல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும், இப்ராஹிம் சத்ரான் 48 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதன்பிறகு கேப்டன் ரஹ்மத் ஷா மற்றும் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ரஹ்மத் ஷா 90 பந்துகளில் 67 ரன்களுடனும், ஷாஹிதி 54 பந்துகளில் 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி 35.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 87 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
வெற்றி தொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஹ்மத் ஷா,
இலக்கையும் கைவசம் உள்ள விக்கெட்டுகளையும் கருத்தில் கொண்டு பொறுமையாக விளையாடுவதே எங்கள் திட்டம். “எங்களிடம் நேரம் இருக்கும்போது முடிந்தவரை அதிக ரன்கள் எடுக்க முயற்சிப்போம். வாய்ப்பு கிடைக்கும்போது பவுண்டரிகளை அடிப்பதுடன், ஒன்று மற்றும் இரண்டு ரன்களாக எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றிக்கொண்டே இருப்போம். இதுதான் எங்களுடைய அணுகுமுறை.
பவர்பிளே ஓவர்களில் நிலையான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க விரும்பியதாகத் தெரிவித்தார். எதிரணி தாக்குதல் பாணியில் பந்துவீசினாலும், அதனைச் சமாளித்து விக்கெட்டுகளைப் பாதுகாப்பதுடன் தொடர்ந்து ரன்களைக் குவிப்பதே திட்டமாக இருந்தது.
மோசமான பந்துகள் கிடைக்கும்போது பவுண்டரிகளை அடிக்க முயற்சிப்பதாகவும், மற்ற நேரங்களில் ஸ்ட்ரைக்கை மாற்றி ரன்களைச் சேர்க்கிறது. இவ்வாறு தொடர்ந்து ரன்களை எடுப்பது எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் . என தெரிவித்தார்.