அவுட்டா? இல்லையா? - சர்ச்சையை கிளப்பிய அபிஷேக் சர்மாவின் விக்கெட்

ஐபிஎல்லில் நேற்று கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதின.
அவுட்டா? இல்லையா? - சர்ச்சையை கிளப்பிய அபிஷேக் சர்மாவின் விக்கெட்
Published on

ஐதராபாத்,

ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத்தின் அபிஷேக் சர்மாவின் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் முதலில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது. அப்போது அபிஷேக் சர்மா, முசரபானி வீசிய பந்தை டீப் ஸ்கொயர் லெக் நோக்கி அடித்தார். அப்போது வருண் முன்னே குதித்து கேட்ச் பிடித்தார். ஆனால் பந்து தரையைத் தொட்டதா என்ற சந்தேகத்தில் மைதான நடுவர்கள் முடிவை மூன்றாம் நடுவரிடம் அனுப்பினர்.

Also Read
முதல் போட்டி மிஸ்... இன்று களமிறங்கும் ‘பிரேவிஸ்’? - வெளியான மாஸ் அப்டேட்
அவுட்டா? இல்லையா? - சர்ச்சையை கிளப்பிய அபிஷேக் சர்மாவின் விக்கெட்

மூன்றாம் நடுவர் அதை கிளீன் கேட்ச் எனக் கருதி அவுட் வழங்கினார். ஆனால், பந்து தரையைத் தொட்டதாக ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். 48 ரன்களை வெறும் 21 பந்துகளில் எடுத்திருந்த அபிஷேக் சர்மா, இந்த முடிவால் அதிருப்தியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் இவ்வாறு தவறான முடிவுகள் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com