ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டி; விளையாடும் வீரர்களை அறிவித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

புலவாயோ,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்தும் புலவாயோவில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிர முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான விளையாடும் வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷாபீக் ஆகியோர் களம் இறங்குகின்றனர். இதைத்தொடர்ந்து கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான், ஹசீபுல்லா கான், சல்மான் அலி ஆகா ஆகியோர் களம் இறங்குகின்றனர்.

தொடர்ந்து முகமது இர்பான் கான், ஆமீர் ஜமால், ஹாரிஸ் ரவுப், முகமது ஹஸ்னைன், பைசல் அக்ரம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணி விவரம்; சைம் அயூப், அப்துல்லா ஷாபீக், கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹசீபுல்லா கான், சல்மான் அலி ஆகா (துணை கேப்டன்), முகமது இர்பான் கான், ஆமீர் ஜமால், ஹாரிஸ் ரவுப், முகமது ஹஸ்னைன், பைசல் அக்ரம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com