சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச முடிவு

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச முடிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச முடிவு
Published on

கார்டிப்,

8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டின. கார்டிப்பில் இன்று (புதன்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சப்ராஸ் அகமது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து வருகிறது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இங்கிலாந்து தான். லீக் சுற்றில் வங்காளதேசம் (8 விக்கெட் வித்தியாசம்), நியூசிலாந்து (87 ரன்), ஆஸ்திரேலியா (40 ரன்) ஆகிய அணிகளை புரட்டிஎடுத்து இங்கிலாந்து கம்பீரமாக அரைஇறுதிக்கு வந்திருக்கிறது.யாரும் கணிக்க முடியாத ஒரு அணியான பாகிஸ்தான் எப்போது விசுவரூபம் எடுக்கும் என்பதை சொல்ல முடியாது.

அந்த அணி பந்து வீச்சில் மிக வலுவாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் மிடில் வரிசையில் நிலவும் சீரற்ற தன்மை பலவீனமாக பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இதுவரை ஒரு போதும் இறுதிசுற்றை எட்டியது இல்லை. இதற்கு முன்பு 3 முறை அரைஇறுதியோடு வெளியேறி இருக்கிறது. இந்த முறையாவது தடையை வெற்றிகரமாக கடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:-

பாகிஸ்தான்,

அசார் அலி, பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம், ரம்மன் ரயீஸ், ஷதப் கான், ஹசன் அலி, ஜூனைட் கான்.

இங்கிலாந்து:

அலெக்ஸ் ஹாலெஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க் வுட், ஜாக் பால்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com