பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 236 ரன்களில் ஆல் அவுட்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 236 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 236 ரன்களில் ஆல் அவுட்
Published on

கார்டிப்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. கார்டிப்பில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் மேத்யூஸ் தலைமையிலான இலங்கையும், சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி அடுத்து இந்தியாவிடம் 322 ரன்களை சேசிங் செய்து சாதனை படைத்தது. இதே போல் பாகிஸ்தானும் ஒரு வெற்றி (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), ஒரு தோல்வி (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரைஇறுதிக்கு முன்னேறும். தோற்கும் அணி வாய்ப்பை இழந்து வெளியேறும். போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாட தொடங்கியது. இலங்கை தொடக்க ஆட்டக்காரர்களில் குண திலகா 13 ரன்களில் அவுட் ஆன நிலையில் டிக்வெல்லா நேர்த்தியாக விளையாடி இலங்கை அணிக்கு ரன் சேர்த்தார். பின்வரிசையில் களமிறங்கிய வீரர்கள் யாரும் இலங்கை அணிக்கு கை கொடுக்கவில்லை.

இலங்கை அணி, 49.2 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணிக்கு 237 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது. ஜுனைத் கான், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அமீர், பஹீம் அஸ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இவ்விரு அணிகளும் இதுவரை 147 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 84-ல் பாகிஸ்தானும், 58-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. 4 ஆட்டங்களில் முடிவில்லை. பாகிஸ்தான் பேட்டிங்கில் முனைப்பு காட்டுமா என்பது இனிதான் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com