ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை எடுத்து பாகிஸ்தான் வீரர் சாதனை

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை எடுத்து பாகிஸ்தான் வீரர் சாதனை
Published on

கராச்சி,

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்றிரவு நடந்தது. இதில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது.

அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அதிரடியாக 87 ரன்களை (45 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து அசத்தினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி இருபது ஓவர் போட்டியில் 11வது ஓவரில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்த 2 ஆயிரம் ரன்களில், 26 போட்டிகளில் 1,200க்கும் கூடுதலான ரன்களை அணிக்காக அவர் எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு 2 நாட்கள் முன்பு புளூ காய்ச்சல் பாதித்து துபாய் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் என்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com