டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
Published on

கொழும்பு,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் இன்று நடைபெற்று வரும் 35வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நமீபியா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டுடப்பட்டது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் பர்ஹான் 58 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நமீபியா களமிறங்கி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com