

லாகூர்,
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
லாகூரில் நடந்து வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக அந்த அணியின் கிரீன் 53 ரன்களும், இங்கிஷ் 51 ரன்களும், மேட் ரென்ஷா 43 ரன்களும் சேர்த்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் ஷாகின்ஷா அப்ரடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கி விளையாடி வருகிறது.