

கொழும்பு,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் இன்று நடைபெறும் 35வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நமீபியா அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டுடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சையும் அயூப் , பர்கான் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.