

நகோயா,
ஆசிய விளையாட்டு அரையிறுதியில் இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் தாமதமாகியுள்ளது.
20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடர் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கும் முன்பே கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இதனிடையே, ஆசிய விளையாட்டில் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 8 அணிகள் மோதின. இதில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
இந்நிலையில், ஆசிய விளையாட்டில் பெண்கள் டி20 கிரிக்கெட் பிரிவில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கொரோகி மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. ஆனால், மைதானத்தில் மழை பெய்து வருவதால் ஆட்டம் தாமதாமாகியுள்ளது. மழை காரணமாக டாஸ் இன்னும் சுண்டப்படவில்லை.