பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம்

பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம்
Published on

பிரிட்ஜ்டவுன்,

முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 312 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ரோஸ்டன் சேஸ் (131 ரன்) சதம் அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணியில் அசார் அலி தனது 13-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 105 ரன்களில் கேட்ச் ஆனார். 112 ஓவர் முடிந்திருந்த போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 86 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com