6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் பறக்க விட்ட பாகிஸ்தான் வீரர்- வீடியோ

இப்திகார் அகமது ,வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் பறக்க விட்டார்.
6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் பறக்க விட்ட பாகிஸ்தான் வீரர்- வீடியோ
Published on

பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் போட்டியின்  (காட்சி கிரிக்கெட்) பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு எதிரான டி20 கண்காட்சி போட்டியை ஏற்பாடு செய்திருந்தது .இந்தப் போட்டி குவெட்டாவில் உள்ள புக்டி மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற பெஷாவர் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்

அதன்படி முதலில் களமிறங்கிய குவெட்டா க்ளாடியேட்டர்ஸ் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.குவெட்டா க்ளாடியேட்டர்ஸ் அணியின் இப்திகார் அகமது பெஷாவர் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் பறக்க விட்டார்.

இறுதியில் இப்திகார் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார்... தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாமின் (பெஷாவர்) அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது. 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமது (கிளாடியேட்டர்ஸ்) அணி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com