ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் விலகல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

புலவாயோ,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.

ஒருநாள் தொடரை அடுத்து டி20 போட்டிகள் தொடங்குகின்றன. இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பாகிஸ்தான் முன்னணி வீரர்களான அகமது டேனியல் மற்றும் ஷாநவாஸ் தஹானி ஆகியோர் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர்கள் இருவரும் தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக அப்பாஸ் அப்ரிடி மற்றும் ஜஹந்தத் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com