எனக்கு பிடித்தமான வீரர் சூர்யவன்ஷி - கம்மின்ஸ் பாராட்டு

எனக்கு பிடித்தமான வீரர்களின் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி இணைந்து விட்டதாக ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேசியுள்ளார்.
எனக்கு பிடித்தமான வீரர் சூர்யவன்ஷி - கம்மின்ஸ் பாராட்டு
Published on

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான ஆட்டத்தில் 229 ரன் இலக்கை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த மைதானத்தில் விரட்டிப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். இஷான் கிஷன் (74 ரன்) ஆட்டநாயகன் விருதை பெற்றார். ராஜஸ்தான் வீரர் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 103 ரன்கள் (37 பந்து, 5 பவுண்டரி, 12 சிக்சர்) விளாசியும் பலன் இல்லாமல் போனது.

வெற்றிக்கு பிறகு சூர்யவன்ஷியை பாராட்டிய ஐதராபாத் கேப்டனும், ஆஸ்திரேலிய நாட்டு வீரருமான பேட் கம்மின்ஸ் கூறுகையில், 'எனக்கு பிடித்தமான வீரர்களின் பட்டியலில் புதிதாக சூர்யவன்ஷியும் இணைந்து விட்டார். அவர் பந்தை மிக வலுவாக அடித்து விரட்டுவதை பார்க்க உற்சாகமாக இருக்கிறது. ஒரு பந்து வீச்சாளராக நீங்கள் மிக துல்லியமாக பந்து வீச வேண்டும். இல்லாவிட்டால் பந்து வெகுதொலைவுக்கு சென்று விடும். அப்படிப்பட்ட பேட்டிங்கை தான் அவர் வெளிப்படுத்துகிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக தொடங்கி இருக்கிறார். அவர் விளையாடும் விதம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com