இந்தியாவுக்கு எதிராக தோற்றதால் பாக். வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்

தொடர் தோல்விகளால் விரக்தியடைந்துள்ள பாகிஸ்தான் ரசிகர்கள், கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் பிற மூத்த வீரர்களை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிராக தோற்றதால் பாக். வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்
Published on

இஸ்லாமாபாத்,

தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பையில் அரை இறுதிக்கு செல்லாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது. சூப்பர் 8 சுற்றில் தோல்வியை சந்தித்த நிலையில், அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் வெளியேறியது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் பெருமை ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியால் கடும் கோபத்திற்கு ஆளான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் சொந்த அணி வீரர்களுக்கு அபராதம் விதித்து உள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியதால், தேசிய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் தலா 5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் தோராயமாக 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்)தலா ஒவ்வொரு வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகையானது வீரர்களின் சம்பளத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியிடம் தோற்றதுதான் இந்த அபராதத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

தொடர் தோல்விகளால் விரக்தியடைந்துள்ள பாகிஸ்தான் ரசிகர்கள், கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் பிற மூத்த வீரர்களை கடுமையாக சாடி வருகின்றனர். அணியில் உள்ள மூத்த வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. கடைசி சில ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com