டெல்லி அணியை வழிநடத்தும் பிளெஸ்ஸிஸ்.. அக்சர் படேல் விளையாடாதது ஏன்..?

மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியை பிளெஸ்சிஸ் வழிநடத்துகிறார்.
Image Courtesy: @IPL / @DelhiCapitals
Image Courtesy: @IPL / @DelhiCapitals
Published on

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இரு அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 63-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை டு பிளெஸ்சிஸ் வழிநடத்துகிறார். இந்நிலையில், அக்சர் படேல் விளையாடாததற்கான காரணத்தை டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அக்சர் படேல் கடந்த இரு தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் திரும்பி வர வேண்டுகிறோம். இந்த சீசனில் அவர் எங்களுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இன்று நாங்கள் நிச்சயமாக அவரை இழப்போம். இவ்வாறு அவர் கூறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com