

கேப்டவுன்,
தென்னாப்பிரிக்கா எஸ்.ஏ. டி20 தொடரின் 5-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்ட் முதல் முறையாக சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். 39 வயதான பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நீண்ட காலமாக இருந்தவர்.
அவர், தற்போது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் போட்டியின்றி இந்திய மதிப்பின்படி ரூ.80 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பொல்லார்டு தவிர மேலும் நான்கு வீரர்களைத் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் வீரரான ஜேசன் ரோல்ஸ் , முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளெஸிஸ், தயான் கலீம், பிளெஸ்ஸிங் முசரபானி மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.