சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை...!

சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை செய்யப்பட்டது.
சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை...!
Published on

சென்னை,

16வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து வெற்றி கோப்பையுடன் சென்னை அணியின் வீரர்கள் , பயிற்சியாளர்கள் , நிர்வாகிகள் இன்று மதியம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங், சிஇஓ காசி விஸ்வநாதன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களோடு ஐபிஎல் வெற்றி கோப்பையும் எடுத்து வரப்பட்டது.

இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு சி.எஸ்.கே அணி வென்ற கோப்பை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com