இந்தியா வங்காளதேசத்தை ஊதித் தள்ளியது, இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்க்கொள்கிறது

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் வங்காளதேசத்தை ஊதி தள்ளிய இந்தியா இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்க்கொள்கிறது.
இந்தியா வங்காளதேசத்தை ஊதித் தள்ளியது, இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்க்கொள்கிறது
Published on

பர்கிங்ஹாம்,

இங்கிலாந்தில் நடந்து வரும் 8வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டி விட்டது.

பர்மிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 2வது அரைஇறுதியில், பி பிரிவில் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் இந்தியா, ஏ பிரிவில் 2வது இடத்தை பெற்ற வங்காளதேசத்தை எதிர்கொண்டாது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வங்காளதேச அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது. ஆட்டம் தொடங்கியதுமே இந்திய ரசிகர்கள் கொண்டாடும் விதமாக 0.6 வது ஓவரில் வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்கார் அவுட் ஆனார். வங்காளதேச அணியில் பேட்ஸ்மேன்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்திய அணிக்கு 265 ரன்களை வங்காளதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அபாரம் காட்டியது. வங்காளதேசத்தின் பந்து வீச்சை நாலாபுறமும் இந்திய வீரர்கள் அடித்து தள்ளினார்கள். இந்தியா 14.4 வது ஓவரில் 87 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஷிகர் தவான் 46 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன், விராட் கோலி கைகோர்த்தார். இருவரும் வங்காளதேசத்தின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர். வங்காளதேசம் நிர்ணயம் செய்த 265 ரன்கள் என்ற இலக்கை 40.1 ஓவர்களிலே உடைத்தது.

இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் (59 பந்துகள் மீதம் இருக்கையில்) வங்காளதேசத்தை ஊதி தள்ளியது. ரோகித் சர்மா அபாரமாக சதம் அடித்து அசத்தினார். இறுதியில் விராட் கோலி (96 ரன்கள், 76 பந்துகள், 13 பவுண்டரிகள்) மற்றும் ரோகித் சர்மா (123 ரன்கள்129 பந்துக்கள்15 பவுண்டரிகள் ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். மேன் ஆப் தி மேட்ச் ஆக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். அரையிறுதியில் வங்காளதேசத்தை விரட்டிய இந்தியா இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்க்கொள்கிறது.

ஜூன் 18-ம் தேதி ஞாயிறு அன்று இந்தியா பாகிஸ்தான் அணியை ஓவல் மைதானத்தில் எதிர்க்கொள்கிறது. சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப்போட்டியும் இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com