பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு கங்குலி, லாராவுடன் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்

இங்கிலாந்து வீரர்கள் ஹாரி புரூக், ஜோ ரூட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு கங்குலி, லாராவுடன் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்
Published on: 

லண்டன்,

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே, இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் இணைந்து நட்புரீதியிலான கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்றார்.

இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் சவுரவ் கங்குலி, அஜிங்க்யா ரஹானே, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஹாரி புரூக், ஜோ ரூட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் வில்லியம் பேட்டிங் செய்து தனது கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தினார். அவரது பேட்டிங் திறனை சவுரவ் கங்குலி மற்றும் ஜோ ரூட் பாராட்டினர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com