

மும்பை,
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ள நிலையில் பள்ளி மாணவிகளுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம். இவரது மனைவி கேட்மிடில்டன். வில்லியமும், அவரது மனைவி கேட்மிடில்டனும் 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். விமானம் மூலம் மராட்டிய மாநிலம் மும்பை வந்த வில்லியம், கேட்மிடில்டன் தம்பதியை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நடத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை வில்லியம் , கேட்மிடில்டன் தம்பதி சந்தித்தனர்.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து வில்லியம் , கேட்மிடில்டன் தம்பதி மும்பையின் பெல்ராட் எஸ்டேட் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று உள்ளூர் உணவுகளை ருசித்தனர். பின்னர், அப்பகுதியில் பள்ளி மாணவிகளுடன் இணைந்து சச்சின் டெண்டுல்கரும், வில்லியமும், கேட்மிடில்டனும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து மும்பை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் வில்லியம், கேட்மிடில்டன் தம்பதி உள்ளூர் மக்களுடன் கலந்துரையாட உள்ளனர். பின்னர், மும்பையில் நாளை நடைபெறும் எர்த்ஷா சுற்றுச்சூழல் விருது நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்க உள்ளனர். பின்னர், மும்பையில் இருந்து டெல்லி செல்லும் வில்லியம், கேட்மிடில்டன் தம்பதி நாளை மறுதினம் பிரதமர் மோடியை சந்திக்கின்றனர். இதனை தொடந்து இந்திய பயணத்தை நிறைவு செய்யும் வில்லியம், கேட்மிடில்டன் தம்பதி நாளை மறுதினம் மீண்டும் இங்கிலாந்து புறப்பட்டு செல்கின்றனர்.