ஐபிஎல் போட்டியின் 5 வருட சம்பளத்தை கொண்டு பிரித்வி ஷா செய்த காரியம்- ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!

90% சம்பள பணத்தை கொண்டு பிரித்வி ஷா செய்த காரியம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Image Courtesy : Twitter @IPL
Image Courtesy : Twitter @IPL
Published on

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிபட்டியலில் 4 வெற்றிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

டெல்லி அணியின் தொடக்க வீரராக கடந்த 5 வருடங்களாக சிறப்பாக செய்லபட்டு வருபவர் பிரித்வி ஷா. இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள சொகுசு அப்பார்ட்மண்டில் ரூ. 10.5 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இதற்காக ஷா கடந்த மார்ச் 31 ஆம் தேதி ரூ. 52.50 லட்சம் முத்திரைக் கட்டணமாகச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது, பின்னர் கடந்த ஏப்ரல் 28 பத்திரப்பதிவு நடந்து முடிந்துள்ளது. பிரித்வி ஷா வாங்கியிருக்கும் வீடு மொத்தம் 2,209 சதுர அடி கொண்டதாகும்.

2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி இவரை ரூ.1.2 கோடி கொடுத்து வாங்கியது. பின்னர் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இவர் அதை தொகையில் தக்கவைக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து இந்தாண்டு ரூ.7.50 கோடி டெல்லி அணி இவரை தக்கவைத்தது.

ஐபிஎல் தொடரில் மொத்தமாக ரூ .12.30 கோடி சம்பாதித்துள்ள பிரித்வி ஷா அதில் 90% சதவீத பணத்தை வீட்டிற்கு செலவு செய்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் தற்போது ஆச்சரியத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com