’பிரியா விடை கொடுக்க கடைசி வாய்ப்பு கொடுத்திருக்கலாம்’: தோனி குறித்து மு.க.ஸ்டாலின்

சென்னை அணிக்கு ஐபிஎல் கோப்பையை விட மேலான பலவற்றை கொடுத்தவர் தோனி என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
’பிரியா விடை கொடுக்க கடைசி வாய்ப்பு கொடுத்திருக்கலாம்’: தோனி குறித்து மு.க.ஸ்டாலின்
Published on: 

சென்னை,

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீராக திகழ்ந்த தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் அவர் விலகி இருக்கிறார். அவரது ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், இதுவரை அவர் சென்னை அணிக்கு செய்த பங்களிப்பை எண்ணி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தோனியின் ஓய்வு முடிவு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு;

கடைசி வாய்ப்பு

சென்னை அணிக்கு ஐபிஎல் கோப்பையை விட மேலான பலவற்றை கொடுத்தவர் தோனி. நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரத்தான் வேண்டும். தமிழகத்தின் அன்புக்குரிய தவப்புதல்வனான அவருக்கு தகுதியான பிரியாவிடையைக் கொடுக்க எங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களுக்கும், மகத்தான வெற்றிகளுக்கும், நாங்கள் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகளுக்கும் நன்றி. சிஎஸ்கே-வின் வழிகாட்டியாக உங்கள் புதிய இன்னிங்சில் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம். ”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

X