ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரபாடா விலகல்

முதல் ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரபாடா விலகல்
Published on

கேப் டவுன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது.

ரபாடா விலகல்

இந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இடம்பெற்றிருந்தார். ஆனால், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து ரபாடா விலகியுள்ளார்.

காயத்தில் இருந்து குணமடைய 6 வார காலம் ஓய்வு தேவை என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளதால் ஒருநாள் தொடரில் இருந்து ரபாடா விலகியுள்ளார். மேலும், டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com