மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : மழையால் இன்றைய ஆட்டங்கள் பாதிப்பு

சிட்னி தண்டர்ஸ் அணி 2.3 ஓவர்களில் 21 எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலே கைவிடப்பட்டது.
மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : மழையால் இன்றைய ஆட்டங்கள் பாதிப்பு
Published on

ஆஸ்திரேலியா

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று காலை 8.00 மணிக்கு நடைபெற்ற 41 வது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்சேர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான பெண்கள் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து 184 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனி அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். மற்றொரு வீராங்கனையான சமாரி அட்டப்பட்டு 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணி 2.3 ஓவர்களில் 21 எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலே கைவிடப்பட்டது.

அதன் பிறகு காலை 11.00 மணிக்கு நடைபெற இருந்த மெல்போர்ன் ரெனேகட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் இடையிலான போட்டியும் மழை காரணத்தால் ஒரு பந்து கூட வீசாத நிலையில் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com